Tuesday, December 2, 2008

ட்ரம்ஸ் சிவமணி அவரக்ளின் ஆல்பம் வெளியீட்டு விழா



செய்தி படங்கள் உதவி: நன்றி தினகரன் நாளிதழ்.

சென்னை, டிசம்பர் 2: டிரம்ஸ் சிவமணியின் “மஹா லீலா” தமிழ் இசை ஆல்பம் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆல்பத்தை சிவமணீன் அம்மா லட்சுமி ஆனந்தன் வெளியிட எஸ்பி.பாலசுப்ரமணியம் பெற்றுக் கொண்டார்.



போட்டோக்கள் உதவி: நன்றி. இண்டியக்ளிட்ஸ் தளம்

பின் எஸ்.பி.பி பேசும் போது, ‘37 ஆண்டுகளூக்கு முன் சிறுவனாக எனது இசைகுழுவில் சேர்ந்தான் சிவமணி, இன்று வரையும் என்னுடைய குழுவில் இருக்கிறான். இடது கையில் டிரம்ஸ் வாசிப்பது கடினம். அதையும் சர்வசாதாரணமாக வாசிப்பான் என்றார். டிரம்ஸ் வாசிப்பவர்கள் குறைவாக உள்ளனர். சிவமணியை போல டிரம்ஸ் வாசிப்பவர்கள் இசைத்துறைக்கு அதிகம்
தேவை என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். சிவமணி பேசிகையில், ‘இந்த ஆல்பத்தில் 12 பாடல்கள் உள்ளன. எஸ்.பி.பி, ஹரிஹரன், சங்கர்மகாதேவன் உள்ளிட்டோர் பாடியுள்ளன்ர் என்றார்.
விழாவில் சவுண்ட் இன்ஜினியர் ஸ்ரீதர் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டி.ரஜேந்தர், வயலின் இசைக்கலைஞர் ஷ்யாம் தாமஸ், மாண்டலின் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்