CONGRATULATION TO PADHMABHOOSAN Dr.S.P.BALASUBRAMANYAM
பத்மபூஷன் பாலுஜி அவரகளே வாழ்த்துக்கள் அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்தேன்.
|
என் உயிரின் ஒலி
என் உயிரின் ஒலி, எனக்கு கேட்டது
புது மலரின் சுகந்தம், என் மனம் நுகர்ந்தது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!
என் நினைவுகள் என்னை விட்டு போனது
நிலவில் புது ஒளியை என் கண்கள் கண்டது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!
தேனின் சுவையில் என்னிதயம் தித்தித்தது
தென்றலின் மடியில் என் மனம் ஊஞ்சலாடுது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!
ஸ்வரங்களுக்குள் என் உணர்வுகள் தொலந்தது போனது
சுகமான இதம்தனை என் நெஞ்சம் உணர்ந்து
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!
காலமெல்லாம் காதல் செய்த கானம் கேட்டது
கண்களூக்குள் மழைத்தூறல் கனிந்து நின்றது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!
மனமெல்லாம் இறக்கை கட்டி பறந்தது
சிறுபிள்ளை போல் எந்தனுள்ளம் துள்ளிச்சிரித்தது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!
இவையென்றென்றும் தொடர..
என்னிதயம் வாழ்த்துகின்றது
பல ஜென்மங்கள் வாழ்கவென்று..!.!
-- கோவை ரவீ

0 comments:
Post a Comment