Friday, August 16, 2013

நம்ம எஸ்.பி.பியின் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சி



நிகழ்ச்சியின்  தலைப்பே அமர்க்களமாக இருந்தது  ஆமாங்க நம்ம எஸ்.பி.பியின் சுதந்திரதின நிகழ்ச்சி மிக அற்புதம். பாலுஜியின் தீவிர ரசிகர் திரு.கோபாலகிருஷ்னன் சார் மற்றும் கீதா நாராயனன குடும்பத்தார் ஆகியோர் நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்று முடிவுசெய்தோம். மாலை 5.30 மணிக்கு போகும் போது பாலுஜியை பார்க்க முடியுமா என்ற கேள்விக்குறியுடனே அவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்றோம் அங்கு (எங்களுக்கு முன்னே அவரை காண கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் இருப்பார்கள்) போச்சுடா பாலுஜியுடன் இன்று பேசினாப்போல தான் என்று வருத்ததுடன் அவர் அழைத்தார் என்று சென்றோம் என்னென்னமோ பேச வேண்டும் என்று இருந்த எங்களுக்கு அவரைக் கண்டதும் சுத்தமாக எல்லாம் மறந்து போயிற்று (ஒவ்வொரு தடவையும் 
இவை நடப்பது தான்) மரியாதை நிமித்தமாக ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அவசர அவசரமாக மொபைலில் ஒரு போட்டோ எடுத்து கிளம்பிவிட்டோம். எங்களூக்கு பிறகு 30 பேர் இருப்பதால் அங்கு நாங்கள் நிற்கவில்லை. கூட்டத்தைப் பார்த்து பாலுஜியும் டென்சன் ஆகிக்கொண்டிருப்பதை அவரின் பேச்சினிலே உனர்ந்தோம்.  வழக்கம் போல் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தினுள் சென்றோம்.  அங்கு பாலுஜியின் ரசிகர் திரு.விஸ்வனாதன் அவர்கள் குடும்பத்தாருடன் வந்திருந்தார் பேஸ்புக் நன்பரான திரு.துரைமுருகன் அவர்களூம் என்னுடன் சேர்ந்து கொண்டார்.
பாலுஜி வழக்கமான பாடும் பாடல்கள் தான் இருந்தாலும் நேரில் மேடையில் கேட்க ஒரு பரவசமாக இருந்தது என்றால் அது மிகையில்லை (பாடல் பட்டியல் கீழே) மொபைலில் பதிவு செய்த சில பாடல்கள் இணைத்துள்ளேன். பாடல்கள் அனைத்தும் ஆரவாரமாக இருக்கும் நேரில் கேட்க உனர்வு ஏற்படுத்தும் என்பது உண்மை. ஒலிக்கோப்பு சரியாக இல்லாவிட்டாலும் வேறு வழியில்லை நேரம் ஒதுக்கி கேளுங்கள். (பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்).

நிகழ்ச்சியின் நல்ல புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்படும்.



1.கப்பலேறி போயாச்சு
2.தாயின் மணிக்கொடி
3.நாளை நமதே
4.ஓராயிரம் நிலவே வா
5.ஆலப்போல்
6.கேளடி கண்மணி
7.மலரே மௌனமா
8.ரம்பம் பம் ஆரம்பம்
9.கொஞ்சி கொஞ்சி
10.தேடும் கண் பார்வை
11.வானிலே தேனிலா
12.தகிட தத்துமி தந்தானா
13.மன்றம் வந்த தென்றலுக்கு
14.பம்சிக்கு பம்சிக்கு
15.உன்னை  நினைச்சேன்
16.சங்கீத ஜாதிமுல்லை


பகுதி - 1



பகுதி -2



பகுதி - 3




பகுதி - 4




1 comment:

Covai Ravee said...

Due to some setting problem. Now clear it. Thanks for try to visit.

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்